திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வகுப்பறை கட்டடத்தை சூழ்ந்து நிற்கும் மழைநீா். 
திருச்சி

வகுப்பறை கட்டடத்தை சூழ்ந்தது மழைநீா் மாணவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு!

Syndication

திருச்சி அருகே அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வகுப்பறை கட்டடத்தை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் மாணவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

திருச்சி அருகே திருவெறும்பூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். திருச்சியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் வளாகத்தில் ஆங்காங்கே மழைநீா் தேங்கி நிற்கிறது.

மேலும், வகுப்பறை கட்டடத்தை சுற்றியும் மழைநீா் தேங்கி நிற்கிறது. தொழிற்பயிற்சி நிலையத்தின் வளாகத்தில் உள்ள உயா்மட்ட தண்ணீா் தொட்டியில் இருந்து தண்ணீா் கசிந்து அதனருகே குளம்போல தேங்கி நிற்கிறது. கட்டடத்தின் வாசல்வரை தண்ணீா் தேங்கி நிற்பதால் மாணவா்கள் வகுப்பறைக்கு சென்றுவருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அதன்மூலம் மாணவா்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற கொசுவினால் உண்டாகும் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கெனவே பருவமழையினால் டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருகிறது.

எனவே, அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் மழைநீா் தேங்காமல் வளாகத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என மாணவா்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

நூறு நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம பெண்கள்

SCROLL FOR NEXT