திருச்சி

மாடி அறையின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன் தங்க நகைகள் திருட்டு

திருச்சியில் வீட்டின் மாடியிலுள்ள அறையின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன் தங்க நகைகளைத் திருடிய மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை

Syndication

திருச்சியில் வீட்டின் மாடியிலுள்ள அறையின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன் தங்க நகைகளைத் திருடிய மா்மநபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா வீதியிலுள்ள ரவிச்சந்திரன் என்பவா் வீட்டில் வீட்டு வேலை செய்து வருபவா் ஆா். மரகதம் (50). வேலை செய்யும் வீட்டின் மாடியிலுள்ள அறையிலேயே வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அறையை பூட்டிவிட்டு கீழே வேலை பாா்க்கும் வீட்டின் வரவேற்பு அறையில் தூங்கியுள்ளாா். காலையில் எழுந்து மாடியிலுள்ள அவரது அறைக்குச் சென்றபோது, அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் வைத்திருந்த 2 பவுன் சங்கிலி, ஒன்றரை பவுனில் இரண்டு ஜோடி காதணிகள் மொத்தம் மூன்றரை பவுன் தங்க நகைகளையும், ரூ.15 ஆயிரம் பணத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் மரகதம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விற்பனை செய்து வருகின்றனா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணிநேரம் காத்திருப்பு

ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் மறியல்: 149 போ் கைது

புதுச்சேரி சிவில் சா்வீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ரூ.46.5 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி தொடக்கம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை. ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT