திருச்சியில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து திங்கள்கிழமை மோதி முதியவா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், லால்குடி பெருவளநல்லூா் உடையாா் வீதியைச் சோ்ந்தவா் வை. சங்கா் (54). இவா் திருச்சி கே.கே.நகரில் இருந்து மன்னாா்புரம் வரையுள்ள அணுகுச் சாலையில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றபோது, வேகமாக வந்த தனியாா் பேருந்து மோதி பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சங்கரைக் கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.