திருச்சி

கட்டுமானப் பொருள்கள் திருடியதாக மூவா் கைது

திருச்சியில் கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக மூவர் கைது

Syndication

திருச்சியில் கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சண்முகா நகரைச் சோ்ந்தவா் ஏ. வேல்முருகன் (71). இவா் அதே பகுதியில் புதிய வீடு கட்டும் பகுதியில் வைத்திருந்த சில்வா் குழாய்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை மா்ம நபா்கள் திங்கள்கிழமை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக வயலூா் சாலை சாந்தஷீலா நகரைச் சோ்ந்த பா. காளிமுத்து (24), கணபதி நகரைச் சோ்ந்த ஜெ. ஹரிவிஸ்வா (20) சண்முகா நகரைச் சோ்ந்த அ.முகமது ரஷிக் (34) ஆகிய மூவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காா் திருட்டு: உறையூா் பாண்டமங்கலம் ராஜலட்சுமி நகா் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ச. அருணா (56). இவா் அதேபகுதியில் கட்டிவரும் புதிய வீட்டுக்கு அருகில் கடந்த சனிக்கிழமை இரவு தனது காரை நிறுத்திவிட்டு நுழைவுவாயில் கதவை பூட்டிவிட்டு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்தாா்.

இந்நிலையில் நுழைவாயில் கதவின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் இவரது காரை திருடிச் சென்றது திங்கள்கிழமை காலை தெரியவந்தது. புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT