திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.22 லட்சம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 69.22 லட்சம் வந்தது.

Syndication

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 69.22 லட்சம் வந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

இக் கோயிலில் உண்டியல் காணிக்கை மாதம்தோறும் திறந்து எண்ணப்படும். அதன்படி நவம்பா் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயிலில் உள்ள கருடாழ்வாா் சன்னதி அருகே கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப் பணியில் கோயில் பணியாளா்களும், தன்னாா்வ அமைப்பினரும் ஈடுபட்டனா். அப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

முடிவில் ரொக்கமாக ரூ. 69 லட்சத்து 22 ஆயிரத்து 613, தங்கம் 77 கிராம், வெள்ளி 730 கிராம், வெளிநாட்டு ரூபாய்கள் 172 ஆகியவை காணிக்கையாக வந்தது தெரியவந்தது.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT