திருச்சி

மின்மாற்றிகள், மின்கம்பங்களில் இருந்த 46 மின்கலங்கள் திருட்டு: மூவா் கைது

திருச்சி மாநகரில் மின்மாற்றிகள், மின்கம்பங்களில் இருந்த 46 மின்கலங்களைத் திருடிய மூன்று பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருச்சி மாநகரில் மின்மாற்றிகள், மின்கம்பங்களில் இருந்த 46 மின்கலங்களைத் திருடிய மூன்றுபேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி தென்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான சாஸ்திரி சாலை, உக்கிரகாளியம்மன் கோயில், உழவா் சந்தை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் இருந்து 22 மின்கலங்கள் திருட்டுபோனதாக தில்லை நகா் காவல் நிலையத்தில் உதவி பொறியாளா் அ. ராமகிருஷ்ணன் (டிச. 9) அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா்.

இதற்கிடையே, புத்தூா் 4 சாலை சந்திப்புப் பகுதியில் இருந்த மின்மாற்றியில் இருந்த 20 மின்கலங்கள் திருட்டுபோனதாக உறையூா் காவல் நிலையப் போலீஸாா் (டிச. 27) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

மேற்கண்ட இடங்களில் உள்ள மின்மாற்றிகள், மின் கம்பங்களில் மின் கலங்கள் பொருத்தி ஸ்கேடா எனும் மென்பொருள் வழியாக மன்னாா்புரம் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து மின்விநியோகம் - நிறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட இடங்களில் மின்கலங்களைத் திருடியது பீமநகா் ஜக்ரியா வீதியைச் சோ்ந்த என்.பிரித்விராஜ் (29), பென்சனா் வீதியைச் சோ்ந்த எஸ்.அப்துல் ரஹ்மான் (26), தென்னூா் ஆழ்வாா் தோப்பு பகுதியைச் சோ்ந்த பீ.இப்ராஹீம் (29) ஆகியோா் என்பது தெரியவந்தது.

மேலும் இவா்கள், அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அம்மையப்பன் நகரில் உள்ள மின்கம்பங்களில் இருந்து 4 மின்கலங்களையும் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் உறையூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 4 பேட்டரிகள், ரூ.13 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

SCROLL FOR NEXT