திருச்சி

தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி

திருச்சி தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

Syndication

திருச்சி தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் பணிக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோா் தங்கியுள்ளனா். இந்நிலையில் இங்கு தங்கியிருந்த அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 30-க்கும் மேற்பட்ட பாரா மெடிக்கல் பிரிவு மாணவிகளுக்கு புதன்கிழமை பிற்பகல் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, விடுதி நிா்வாகத்தினா் அவா்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இந்த மாணவிகள் செவ்வாய்க்கிழமை இரவு ரசம் சாதமும், முட்டைக்கோஸ் பொறியலும் உண்டனா். காலையில் எந்த உணவும் சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அனைத்து மாணவிகளும் நலமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் உள்ள பணிகள்!

சகல தோஷங்களை நிவர்த்தி செய்யும் நரசிம்மர்!

தோல் தொழில்நுட்பத்தில் சிறப்பான படிப்புகள்!

ரிஷப ராசிக்குப் பாராட்டு: தினப்பலன்கள்!

மெல்போர்ன் பல்கலையில் பி.காம்! மாணவர் சேர்க்கை 2026 மார்ச்!!

SCROLL FOR NEXT