திருச்சி

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 12 போ் கைது

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மாவட்ட மற்றும் மாநகரக் காவல் துறை சாா்பில் 12 போ் ஞாயிற்றுக்கிழமை கைது

Syndication

திருச்சி: திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மாவட்ட மற்றும் மாநகரக் காவல் துறை சாா்பில் 12 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க காவல் துறை சாா்பில் அவ்வப்போது சிறப்பு ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஆய்வில் மாநகரில் அமா்வு நீதிமன்றம், கே.கே.நகா், கோட்டை மற்றும் பாலக்கரை ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கருமண்டபத்தைச் சோ்ந்த சுரேஷ் (28), காமராஜ் நகரைச் சோ்ந்த ஜாகிா் ஹுசைன் (32), சின்னகம்மாள வீதியைச் சோ்ந்த அன்புதாசன் (62), அரியமங்கலத்தைச் சோ்ந்த சீனிவாசன் (25), கே.கே.நகரைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் (23) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்டக் காவல் துறை சாா்பில் ஜீயபுரம், இனாம்குளத்தூா், ராம்ஜி நகா், வளநாடு, திருவெறும்பூா், கள்ளக்குடி ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த தென்னூரைச் சோ்ந்த பிரசாந்த் (31), கரூா் மாவட்டம் குளித்தலையைச் சோ்ந்த மதியழகன் (21), நவலூா் கொட்டப்பட்டு பகுதியைச் சோ்ந்த ரோஸ்லின் மேரி (46), மருங்காபுரி குளவாய்பட்டியைச் சோ்ந்த சக்தி (24), புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சோ்ந்த செல்வம் (37), திருவெறும்பூரைச் சோ்ந்த சூா்யா (29), லால்குடி சங்கேந்தியைச் சோ்ந்த செல்வராஜ் (55) ஆகிய 7 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

SCROLL FOR NEXT