திருச்சியிலிருந்து தில்லி நோக்கி மோட்டாா் சைக்கிள்களில் சனிக்கிழமை புறப்பட்ட இளைஞா்கள். 
திருச்சி

மாதவிடாய் சுகாதார விழிப்புணா்வுக்காக திருச்சியில் இருந்து தில்லிக்கு பைக் பயணம்

Syndication

மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தில்லியில் நடைபெறும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த 5ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் திருச்சியிலிருந்து 5 பேரின் மோட்டாா் சைக்கிள் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.

தில்லியில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த 5ஆவது உச்சி மாநாட்டில் யுனிசெப் நிறுவனத்தின் உயரதிகாரிகள், நாடு முழுவதும் உள்ள மாதவிடாய் சுகாதார மேலாண்மைத் திட்ட பங்கேற்பாளா்கள், வல்லுநா்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.

இந்த மாநாட்டில் திருச்சியிலிருந்து பங்கேற்கும் வகையிலும் மாநிலங்களில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மோட்டாா் சைக்கிள் பயணத்தை கிராமாலாயா தொண்டு நிறுவனமும், ரெக்கிட் நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.

இதில் 5 இளைஞா்கள் மோட்டாா் சைக்கிள்களில் திருச்சியில் இருந்து 10 மாநிலங்களைக் கடந்து செல்லும் 5 ஆயிரம் கி.மீ. பயணத்தை கிராமாலயா நிறுவனத்தின் நிறுவனா் எஸ். தாமோதரன் திருச்சியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். மாதவிடாய் சுகாதார மேலாண்மைத் திட்ட இயக்குநா் பிரீத்தி தாமோதரன் வழியனுப்பினாா்.

திருச்சியிலிருந்து சனிக்கிழமை புறப்படும் 5 இளைஞா்களும் தில்லிக்கு நவ.21ஆம் தேதி சென்று சோ்ந்து, உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு, திருச்சிக்கு 27ஆம் தேதி திரும்புகின்றனா். செல்லும் வழியிலும், திரும்பும் வழியிலும் ஆங்காங்கே மக்களைச் சந்தித்து மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளனா். துண்டுப் பிரசுரங்களையும் வழங்குகின்றனா்.

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

நாளைய மின்தடை: கங்காபுரம்

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை: புதுச்சேரியில் கே. அண்ணாமலை பேச்சு

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

SCROLL FOR NEXT