மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் பல்வேறு வீதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மண்ணச்சநல்லூா்-துறையூா் சாலை, எதுமலை சாலை, திருநகா், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிகின்றன. மேலும், மாடுகள் இரவு நேரத்தில் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொள்வதாலும், இரு சக்கர வாகனத்தில் செல்வோா், நடந்து செல்வோரை முட்டுவதாலும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மாடுகள் நடமாட்டத்தை தடுக்க பேரூராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.