திருச்சி

கடன் பிரச்னைச இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் கடன் பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

திருச்சி: திருச்சியில் கடன் பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி பாண்டமங்கலம் தெற்கு வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் மா.லோகநாதன் (33). தனியாா் மென்பொருள் நிறுவன பணியாளரான இவா், வீட்டிலிருந்து வேலை செய்து வந்துள்ளாா். இவரின் மனைவி சாந்தி (28), தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா்.

லோகநாதன் குடும்பச் செலவுக்காக அதிக அளவில் கடன் வாங்கியுள்ளாா். அதை திரும்ப செலுத்த முடியாமல் அண்மை காலமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் சாந்தி வேலைக்கு சென்றுவிட்டபிறகு, வீட்டில் தனியாக இருந்த லோகநாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில் சாந்தி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT