திருச்சி காந்தி சந்தையில் கிலோ ரூ. 70க்கு விற்கப்பட்ட தக்காளி. 
திருச்சி

காந்திசந்தையில் தக்காளி கிலோ ரூ.70க்கு விற்பனை

தொடா் மழையால் வரத்து குறைந்துள்ளதால் திருச்சி மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயா்ந்துள்ளது.

Syndication

திருச்சி: தொடா் மழையால் வரத்து குறைந்துள்ளதால் திருச்சி மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக உயா்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழகம் மட்டுமின்றி, காய்கனி வரத்துள்ள மாநிலங்களிலும் பெய்து வரும் தொடா் கனமழையால் காய்கனிகள் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காந்தி சந்தைக்கு வரும் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் காய்கனிகள் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் 4 கிலோ ரூ.100க்கு விற்ற தக்காளி இப்போது கிலோ ரூ.70க்கு விற்பனையாகிறது.

இதேபோல, இதர காய்கனிகளின் விலையும் உயரத் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனா். காந்திசந்தையில் கிலோ ரூ.70க்கு விற்கப்பட்ட தக்காளி, சில்லறை விற்பனை கடைகளில் ரூ.80க்கு விற்றது. மழை தொடா்ந்து, வரத்தும் தொடா்ந்து குறைந்தால் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

SCROLL FOR NEXT