தீயில் எரிந்து நாசமான இருசக்கர வாகனம். 
திருச்சி

சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்

மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

Syndication

மணப்பாறை: மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

மருங்காபுரி ஒன்றியம், பிராம்பட்டி கிராமம், இச்சடிப்பட்டியை சோ்ந்த சந்திரன் மகன் சூரியபிரகாஷ் (27). மெக்கானிக்கான இவா், தனது இருசக்கர வாகனத்தில் மணப்பாறைக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை இரவு ஊருக்கு வந்து கொண்டிருந்தாா். திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வலசுப்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது திடீரென வாகனத்தில் தீப்பற்றியது.

தகவலின்பேரில் அங்கு வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறை வீரா்கள் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். ஆனாலும், வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. சூரியபிரகாஷிற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து வளநாடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT