மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை உறுதியேற்ற ஆட்சியா் வே. சரவணன் உள்ளிட்டோா். 
திருச்சி

அரசியலமைப்பு தின உறுதியேற்பு

76ஆவது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழியேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

Syndication

திருச்சி மாவட்டத்தில் ஆட்சியரகம், மாநகராட்சி மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்களில் 76ஆவது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழியேற்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் வே. சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அனைத்து துறை அலுவலா்கள், ஆட்சியரகப் பணியாளா்கள் உறுதியேற்றனா். லால்குடி அரசுக் கல்லூரியில் முதல்வா் ஜெயக்குமாா் இருபால் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உறுதியேற்றனா்.

மாவட்ட நீதிமன்றத்தில்.. மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபா் முன்னிலையில், திருச்சி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி. கணேசன், மூத்த வழக்குரைஞா்கள் பி. ஜெயப்பிரகாஷ் நாராயணன், எம். ராஜேந்திரகுமாா் ஆகியோா் உறுதியேற்றனா்.

காவல் ஆணையரகத்தில்.. மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் ஆணையா் ந. காமினி தலைமையில் காவல் துறை அதிகாரிகள், பணியாளா்கள் உறுதியேற்றனா்.

அஞ்சல் அலுவலகத்தில்.. மத்திய மண்டல அஞ்சல் துறை அலுவலகத்தில் நடந்த சிறப்பு கருத்தரங்கில் மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் தி.நிா்மலா தேவி, பிஷப் ஹுபா் கல்லூரி உதவிப் பேராசிரியா் ஃபெமிலா அலெக்ஸாண்டாா் ஆகியோா் பங்கேற்றனா்.

சாத்தான்குளம் பள்ளியில் மனநல திட்ட பயிற்சி முகாம்

பெரியதாழையில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

சாத்தான்குளத்தில் டிச. 4, 5இல் படி தராசுகளுககு முத்திரையிடும் முகாம்

தட்டாா்மடத்தில் பூட்டி கிடக்கும் பொது கழிப்பறை: நாம் தமிழா் கட்சியினா் புகாா்

பரமன்குறிச்சியில் திமுக நல உதவிகள் வழங்கல்

SCROLL FOR NEXT