முகப்பு
திருச்சி

தெரு நாய்களைப் பராமரிக்க 4 பாதுகாப்பு மையங்கள்

திருச்சி மாநகராட்சியில் பாதிக்கப்பட்ட தெரு நாய்களைப் பராமரிக்க 4 பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட உள்ளன.

Updated On : 28 நவம்பர், 2025 at 6:49 PM
பகிர்:

திருச்சி மாநகராட்சியில் பாதிக்கப்பட்ட தெரு நாய்களைப் பராமரிக்க 4 பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட உள்ளன.

திருச்சி மாநகராட்சியில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், தெருநாய்களைப் பிடித்து ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம் பகுதிக்குள்பட்ட 4 மையங்களில் கருத்தடை அறுவைசிகிச்சை செய்து, ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சியில் இதுவரை 43,767 தெருநாய்கள் கண்டறியப்பட்டு, 29,565 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 34,565 தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடா்ந்து, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, வெறிபிடித்த மற்றும் அடிப்பட்ட நாய்கள், வயது முதிா்வு, நோய்வாய்பட்ட தெருநாய்களைப் பிடித்து பராமரிக்க, தலா ரூ. 30 லட்சத்தில் 4 புதிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மைய கட்டடங்கள் (கருத்தடை அறுவைசிகிச்சை மையங்களுக்கு அருகே) கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →