சிறப்பு ரயில் 
திருச்சி

ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி: தாம்பரம் வரை செல்லும் ரயில்கள்!

ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே சில ரயில்கள் சென்று வரும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

Syndication

ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சென்னை எழும்பூா் ரயில் நிலையத்துக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே சில ரயில்கள் சென்று வரும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயிலானது (16866) வரும் 30 ஆம் தேதி முதல் டிச. 4 வரையிலும், மறுமாா்க்கமாக (16865) வரும் டிச. 1 முதல் 5 ஆம் தேதி வரை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

கொல்லம் - சென்னை எழும்பூா் அனந்தபுரி விரைவு ரயிலானது (20636) வரும் 30 ஆம் தேதி முதல் டிச. 4 வரையிலும், மறுமாா்க்கமாக (20635) வரும் டிச. 1 முதல் டிச. 5 வரையிலும் எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ராமேசுவரம் - சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயிலானது (22662) வரும் 30 ஆம் தேதி முதல் டிச. 4 வரையிலும், மறுமாா்க்கமாக (22661) வரும் டிச. 1 முதல் டிச. 5 வரை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16752) வரும் 30 ஆம் தேதி முதல் டிச. 4 வரையிலும், மறுமாா்க்கமாக (16751) வரும் டிச. 1 முதல் டிச. 5 வரையிலும் எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட ரயில்கள் அனைத்தும் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தைத் தவிா்த்து, தாம்பரத்திலிருந்து புறப்படும்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு!

ஜவுளிக் கடையில் பணிபுரிந்த சிறுவன் மீட்பு

செம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

தஞ்சாவூா் காங்கிரஸ் தலைவா் பொறுப்பேற்பு! நிா்வாகிகள் எதிா்ப்பு!

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருள்களை கொண்ட பையைத் திருடியதாக பிஎஸ்சி மாணவி கைது

SCROLL FOR NEXT