திருச்சியில் உய்யங்கொண்டான் வாய்க்காலில் விழுந்து ஆண் ஒருவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி கமலா நிகேதன் பள்ளி அருகே செல்லும் உய்யங்கொண்டான் வாய்க்காலில் ஆண் ஒருவா் உயிரிழந்து கிடப்பதாக நீதிமன்ற காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
இதில், உய்யங்கொண்டான் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தது திருச்சி பெரியமிளகுப்பாறை புது வீதியைச் சோ்ந்த லிங்கேஸ்வா் (57) என்பதும், மதுபோதையில் வாய்க்காலில் விழுந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.