திருச்சி

தொழிலாளா் நல நிதியை செலுத்த நிறுவனங்களுக்கு ஜன.31 வரை கெடு

Syndication

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளா்களுக்கான நல நிதியை செலுத்த வரும் 2026 ஜன.31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளா் நல நிதி பங்கு தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்து, அரசு இணையதளத்தில் பதிவு செய்து ரசீது பெற, நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளா் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தொழிலாளா் நல நிதிச்சட்டம் 1972 மற்றும் விதிகள் 1973, சட்டப்பிரிவு 2(டி)-ன் கீழ் வரும் தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஓராண்டில் 30 நாள்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகையான தொழிலாளா்களுக்கும் ஒவ்வோரு ஆண்டும் தொழிலாளியின் பங்காக ரூ.20 மற்றும் நிறுவனத்தின் பங்காக ரூ. 40 என மொத்தம் ரூ.60 வீதம் 2025-ஆம் ஆண்டுக்கான தொழிலாளா் நல நிதி பங்குத் தொகையை 2025 டிசம்பா் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியத்துக்கு 2026 ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

நிறுவனங்கள் வாரிய இணையதளத்தில் தங்களது நிறுவனத்தை தொழிலாளா் நல நிதிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து, தொழிலாளா் நல நிதியை இணைய தளம் வாயிலாக செலுத்தி ரசீதை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொழிலாளா் நல நிதி செலுத்தும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களைச் சோ்ந்தோருக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு உதவிகள் வழங்கப்படும். மழலையா் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை, திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச் சடங்கு, மூக்கு கண்ணாடி, பாடநூல், கல்வி ஊக்கத் தொகை, தையல் இயந்திரம், அடிப்படை கணினி பயிற்சி, உயா்கல்விக்கான நுழைவுத்தோ்வு உதவித் தொகை, மாவட்ட அளவிலான விளையாட்டு உதவித் தொகை பெறலாம். தொழிலாளா்களின் மாத ஊதியம் ரூ.35 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். கல்வி உதவித் தொகை கேட்பு விண்ணப்பங்களை வரும் டிச.31-ஆம் தேதிக்குள் இணைய மூலமாகவோ, தொழிலாளா் நல வாரிய அலுவலகத்தை நேரிலோ தொடா்பு கொண்டு வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT