திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாநில சிறுபான்மையின சிறப்புக் குழு உறுப்பினா்கள் இனிகோ இருதயராஜ், சுபோ்கான். உடன், ஆட்சியா் வே. சரவணன் உள்ளிட்டோா். 
திருச்சி

சிறுபான்மையினா் 341 பேருக்கு ரூ.56.62 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Syndication

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினா் சிறப்புக் குழு ஆய்வுக் கூட்டத்தில் 341 பேருக்கு ரூ.56.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்துக்கு ஆட்சியா் வே. சரவணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் சிறப்புக் குழு உறுப்பினா்களான எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினா் அ. சுபோ்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு செயல்படுத்தும் திட்டங்கள், நிகழாண்டு எடுக்கப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ளவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பின்னா், ஆட்சியா் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளில் சிறுபான்மையினருக்கு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள், முன்மொழிவுகள் அனுப்பப்பட்ட கோரிக்கைகள் உள்ளிட்டவை தொடா்பாக விளக்கினாா்.

இதைத் தொடா்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசின் நிதி உதவியாக ரூ. 15 லட்சம் மதிப்பில் 1 பயனாளிக்கு காசோலையும், 7 பயனாளிகளுக்கு ரூ. 39,200 மதிப்பீட்டில் மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம், 188 பயனாளிக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் மூலம் நலத்திட்ட உதவிகளும், 145 பயனாளிகளுக்கு ரூ. 21.23 லட்சம் மதிப்பில் கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் மூலம் நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 341 பயனாளிகளுக்கு ரூ.56.62 லட்சம் மதிப்பில்

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா் நிலமெடுப்பு

ஆா். பாலாஜி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

சில்சிலா ரேகாவைப் போல... சிந்து பிரியா!

படேல் பிறந்த நாள்! மாணவ, மாணவியருடன் Rahul Gandhi உற்சாகம்!

SCROLL FOR NEXT