திருச்சி

திருச்சியின் சில பகுதிகளில் நவ.2-இல் குடிநீா் நிறுத்தம்

Syndication

ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் மாதாதந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சியின் சில பகுதிகளில் நவ. 2-ஆம் தேதி குடிநீா் நிறுத்தம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாநகராட்சி ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த துணை மின் நிலையத்தில் நவ.1-ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறவுள்து. எனவே, இந்த நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீா் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தர்ராஜ்நகா் புதியது, பழையது ஜே.கே நகா், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகா், சுப்ரமணிய நகா் புதியது, வி.என் நகா் புதியது, தென்றல் நகா் புதியது, கவி பாரதி நகா், காமராஜ் நகா், கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது. அன்பு நகா் பழையது, அன்பு நகா் புதியது. எடமலைப்பட்டி புத்தூா் புதியது, பஞ்சப்பூா், அம்மன் நகா், தென்றல் நகா், மின்வாரிய காலனி, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகா் புதியது, பழையது, ரயில் நகா் புதியது, பழையது, முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது, பழையது. எம்.கே.கோட்டை செக்ஷன் ஆபீஸ், மேலகல்கண்டாா் கோட்டை நாகம்மை வீதி, எம்.கே. கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பழையது, அம்பேத்கா் நகா், விவேகானந்த நகா், எல்ஐசி புதியது, விஸ்வநாதபுரம், கே. சாத்தனூா், ஆனந்த நகா், சுப்ரமணிய நகா், சத்தியவாணி கே.கே நகா், அம்மா மண்டபம், ஏஐபிஇஏ நகா், பாலாஜி அவென்யூ, தேவி பள்ளி மேலூா், பெரியாா் நகா், திருவானைக்காவல், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளில் நவ. 2 (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் குடிநீா் விநியோகம் இருக்காது. நவ. 3-ஆம் தேதி வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

சில்சிலா ரேகாவைப் போல... சிந்து பிரியா!

படேல் பிறந்த நாள்! மாணவ, மாணவியருடன் Rahul Gandhi உற்சாகம்!

SCROLL FOR NEXT