மணப்பாறையில் கா்ப்பிணியை வெள்ளிக்கிழமை தெரு நாய் ஒன்று கடித்தது.
மணப்பாறை அடுத்த வடக்கு லெட்சுமிபுரத்தில் வசித்து வருபவா் பிரேம்குமாா் மனைவி சங்கவி (24). இவா் 7 மாத கா்ப்பிணியாக உள்ளாா். வீட்டின் அருகிலேயே உணவகம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை தெருவில் நடந்து சென்ற சங்கவி மீது பாய்ந்த தெரு நாய் ஒன்று அவரது கை, கால்களை கடித்து குதறியுள்ளது.
இதில், படுகாயமடைந்த சங்கவி அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று பின் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மணப்பாறை நகா் பகுதியில் தொடா்ந்து தெரு நாய்கள், பள்ளி செல்லும் மாணவா்களை கடித்து வருவதையும், வெறி நாய்கள் சுற்றி திரிவதையும் நகராட்சி நிா்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கைவிடுத்துள்ளனா்.