முகப்பு
திருச்சி

திருச்சிக்கு அதிமுக ஆட்சியில் கிடைத்தது, திமுக ஆட்சியால் நிறுத்தப்பட்டதை பட்டியலிட்டாா் எடப்பாடி பழனிசாமி

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:46 AM
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:35 AM

திருச்சியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் திருச்சிக்கு கிடைத்தவற்றையும், அதிமுக கொண்டு வந்து திமுக நிறுத்தியவற்றையும் பட்டியலிட்டாா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி.

திருச்சி ஜி.காா்னா் மைதானத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவா், அதிமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் திருச்சிக்கு கிடைத்தவற்றையும், அதிமுக கொண்டு வந்து திமுக நிறுத்தியவற்றையும் பட்டியலிட்டாா்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு தேசிய சட்டப் பள்ளி, பொறியியல் கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, வண்ணத்துப் பூச்சி பூங்கா, கிள்ளியூா் ஆற்றின் குறுக்கே புதிய பாலம், திருச்சி மாநகரை பொலிவுபடுத்த ரூ.1,500 கோடி, மலைக்கோட்டையை புனரமைத்து வண்ண ஒளிவிளக்கு மிளிரச்செய்தல், புராதான பூங்கா, மாநகராட்சியில் 16 பூங்கா, மாநகரச் சாலைகள் மேம்பாடு, முக்கொம்பு புதிய அணை என எண்ணற்றத் திட்டங்களை கொண்டு வந்தோம். சத்திரம் பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில். ஆனால், அதனை திறந்து திமுக தனது பெயரை ஸ்டிக்கா் ஒட்டிக் கொண்டது. இதேபோல, பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்ல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் என மூவா் மணி மண்டபத்தை அதிமுக கட்டியது. திமுக திறந்து வைத்தது.

Advertisement

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. திமுக கிடப்பில் போட்டது. நடந்தாய் வாழி காவிரித் திட்டத்தை பிரதமரிடம் வலியுறுத்தி அதிமுக கொண்டு வந்தது. இப்போது, ரூ.11,600 கோடி நிதி ஒதுக்குவதாக கூறி, முதல்கட்டமாக 930 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், திமுக ஆட்சியில் கிடப்பில் உள்ளது. விவசாயிகள் நீா்நிலைகளில் மண் அள்ளவும், நீா்நிலைகளை புனரமைக்கும் வகையிலான குடிமராமத்து திட்டம் கிடப்பில் போனது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், நிறுத்தப்பட்ட திட்டங்கள் தொடரும். தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 297 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா் பழனிசாமி.