முகப்பு
திருச்சி

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:19 AM
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:25 PM

பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) ஏப். 25, 29 ஆகிய தேதிகளில் குளித்தலை - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் பாலக்காடு - குளித்தலை வரை மட்டுமே இயங்கும். பணிகள் நிறைவடைந்ததும் குளித்தலை - திருச்சி இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

Advertisement

திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) ஏப். 25, 29 ஆகிய தேதிகளில் பெருகமணி - பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயில் திருச்சி - பெருகமணி வரை மட்டுமே இயங்கும். பணிகள் நிறைவடைந்ததும் பெருகமணி - பாலக்காடு இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

வழித்தட மாற்றம்...: செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) ஏப். 24, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) ஏப். 26, 30 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்தைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) ஏப். 25 ஆம் தேதியும், கன்னியாகுமரி-ஹைதராபாத் விரைவு ரயிலானது (17070) ஏப். 24 ஆம் தேதியும் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) ஏப். 23, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயிலானது (16363) ஏப். 29 ஆம் தேதியும், தூத்துக்குடி-கச்சிகுடா விரைவு ரயிலானது (17616) ஏப். 29 ஆம் தேதியும் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.