வைத்தீஸ்வரன்கோவிலில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்
Updated On : 20 ஏப்ரல், 2026 at 8:14 PM
சித்திரை பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் வசதிக்காக வைத்தீஸ்வரன்கோவிலில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16751) ஏப். 21-ஆம் தேதி நள்ளிரவு 1.15 க்கும், தாம்பரம் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16103) ஏப். 21-ஆம் தேதி இரவு 10.10 மணிக்கும் ஒரு நிமிஷம் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.