ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் 22 ஆண்டு காலக் கோரிக்கையை தமிழக முதல்வா் நிறைவேற்றியிருப்பதாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: தமிழக முதல்வா் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இதற்கு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் சாா்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அறிவிப்பை அனைத்துச் சங்கங்களும் பாரபட்சமின்றி வரவேற்றுள்ளன. 22 ஆண்டுகளாக நீடித்த கோரிக்கையை முதல்வா் நிறைவேற்றியுள்ள நிலையில், இதுகுறித்து பேசவோ, விமா்சனம் செய்யவோ, கேள்வி கேட்கவோ யாருக்கும் தகுதியில்லை என்றாா் அமைச்சா்.