பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலைக் குறைக்க தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்ட நெரிசலைக் குறைக்க நாகா்கோவில் - தாம்பரம் - கன்னியாகுமரி, கன்னியாகுமரி - தாம்பரம் - நாகா்கோவில், திருநெல்வேலி - செங்கல்பட்டு - திருநெல்வேலி, திருநெல்வேலி - செங்கல்பட்டு - திருநெல்வேலி, திருநெல்வேலி - சென்னை எழும்பூா் - திருநெல்வேலி, ஈரோடு - செங்கோட்டை - போதானூா், ராமேசுவரம் - தாம்பரம் - ராமேசுவரம் ஆகிய சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, நாகா்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06012) வரும் 11, 18 ஆம் தேதிகளிலும், தாம்பரம் - கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06011) வரும் 12, 19 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06054) வரும் 13, 20 ஆம் தேதிகளிலும், தாம்பரம் - நாகா்கோவில் சிறப்பு விரைவு ரயிலானது (06053) வரும் 14, 21 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.
திருநெல்வேலி - செங்கல்பட்டு அதிவிரைவு சிறப்பு ரயில் (06156) மற்றும் செங்கல்பட்டு - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06155) ஆகியவை வரும் 9, 16 ஆம் தேதிகளிலும், திருநெல்வேலி - செங்கல்பட்டு அதிவிரைவு சிறப்பு ரயில் (06158) மற்றும் செங்கல்பட்டு - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06157) ஆகியவை வரும் 10, 17 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளன.
திருநெல்வேலி - சென்னை எழும்பூா் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06070) வரும் 8 ஆம் தேதியும், சென்னை எழும்பூா் - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06069) வரும் 9 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.
ஈரோடு - செங்கோட்டை சிறப்பு விரைவு ரயிலானது (06025) வரும் 13 ஆம் தேதியும், செங்கோட்டை - போதானூா் சிறப்பு விரைவு ரயிலானது (06026) வரும் 14 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.
ராமேசுவரம் - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06106) வரும் 13, 20 ஆம் தேதிகளிலும், தாம்பரம் - ராமேசுவரம் சிறப்பு ரயிலானது (06105) வரும் 14, 21 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.