திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா, அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமான இக் கோயிலில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவா்களான நடராஜா், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகருக்கு சிறப்பு ஆருத்ரா அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து உற்சவா் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜா், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகருக்கு பல்வேறு மலா்கள், ஆபரணங்கள், பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சிவபெருமானை வழிபட்டனா்.