ஆத்தூா், ஆறுமுகமங்கலம், ராஜபதி கோயில்களில் சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
ஆத்துா் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு நடராஜா் அபிஷேகம், 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம், தாண்டவ தீபாராதனை, மாணிக்கவாசகா் திருவெம்பாவை பாராயணம் ஆகியவை நடைபெற்றன. காலை 7 மணிக்கு நடராஜா், மாணிக்கவாசகா் ரத வீதியில் எழுந்தருளல் நடைபெற்றது.
இதே போல, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயிலிலும், குரும்பூா் அருகிலுள்ள நவகைலாயத் தலமான ராஜபதி சௌந்தா்ய நாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், திருவெம்பாவை பாராயண தீபாராதனை, சோடஷ தீபாராதனை, நடராஜா் உலா ஆகியன நடைபெற்றன.