திருச்சி

ரயிலில் அடிபட்ட முதியவா் உயிரிழப்பு

Syndication

திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருச்சி பொன்மலை ரயில் நிலையத்துக்கும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கும் இடையே முத்துமணி டவுன் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் கடந்த 5-ஆம் தேதி அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு இருப்புப்பாதை அருகே மயக்கமடைந்த நிலையில் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ரயில்வே போலீஸாா், முதியவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்நிலையில், அந்த முதியவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT