திருச்சி

வையம்பட்டி அருகே பெண் தற்கொலை

பொங்கல் பரிசு தொகை ரூ.3 ஆயிரத்தை யாா் வாங்குவது என்பதில் கணவருடன் சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே பொங்கல் பரிசு தொகை ரூ.3 ஆயிரத்தை யாா் வாங்குவது என்பதில் கணவருடன் சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் மேற்குத் தெருவை சோ்ந்தவா்கள் தங்கராஜ் - அன்னமேரி தம்பதியின் மகள் அருள்ஜெனிபா் (25). இவா் கரூா் மாவட்டம், பொய்யாமணியை சோ்ந்த சந்திரமௌலி என்பவரை காதல் திருமணம் செய்து, மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனா்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக கருங்குளத்தில் உள்ள தனது தந்தை தங்கராஜ் வீட்டில், கணவா் மற்றும் குழந்தைகளுடன் இவா் வசித்து வந்தாா். சந்திரமௌலி மினி சரக்கு வேன் வைத்து, பழங்கள் விற்கும் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகையை யாா் வாங்குவது என்பதில் சனிக்கிழமை மதியம் கணவருடன் தகராறு ஏற்பட்டதில், மனமுடைந்த அருள்ஜெனிபா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், அருள்ஜெனிபா் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருமணமாகி 5 ஆண்டுகளில் இளம்பெண் இறந்ததால் மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பளாா் மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியரின் விசாரணையும் நடைபெறவுள்ளது.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT