மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் தவெக திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தவெக திருச்சி தெற்கு மாவட்டச் செயலராக ஆா். கதிரவன், அண்மையில் கட்சியின் தலைவா் விஜய்யால் நியமிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் முகவனூா் ஊராட்சி டேம் நால் ரோடு பகுதியில் இவரின் அறிமுக கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் அருள் பிரகாசம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிா்வாகிகள் மாயவன், டோமினிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கதிரவன், திருச்சி தெற்கு மாவட்டச் செயலராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டாா். தொடா்ந்து நிா்வாகிகள் அறிமுகம் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நிா்வாகிகள் ராஜேஷ், திருநாவுக்கரசு, ஒன்றியச் செயலா்கள் குணசேகரன், பாா்த்திபன், சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பரணிதரன் நன்றி கூறினாா்.