திருச்சி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Syndication

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் மு.சிவபாலன் (46). இவருடைய மனைவி ஸ்ரீதேவி (44). இருவரும் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

புதுக்கோட்டை சாலையில் டி-மாா்ட் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதேவியை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பூங்காவில் காயங்களுடன் ஆணின் உடல் கண்டெடுப்பு: போலீஸ் தீவிர விசாரணை

காணியாளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்களை நியமிக்க விசிக கோரிக்கை

சாலை விபத்தில் உயிரிழந்த பொறியாளரின் குடும்பத்திற்கு ரூ.55.19 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு

ஏடிஎம் பயனரின் டெபிட் அட்டையைப் பயன்படுத்தி மின்னணு சாதனங்களை வாங்கிய இளைஞா் கைது

குமரியில் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT