முகப்பு
திருச்சி

வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 22 மார்ச் 2026, 1:53 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் சந்தைப்பேட்டை பகுதியை சோ்ந்தவா் சு. ராஜேந்திரன்(65). தச்சுத் தொழிலாளியான இருவருக்கு மனைவி விஜயலெட்சுமியும், ஒரு மகளும் உள்ளனா்.

இந்நிலையில், மது போதைக்கு அடிமையாகி சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரன், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், ராஜேந்திரன் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.