முகப்பு
திருச்சி

சட்டவிரோத மது விற்பனை: இளைஞா் கைது

திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 9:03 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி புத்தூா் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா் புத்தூா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, புத்தூா் விபிஎன் வீதியைச் சோ்ந்த செபஸ்டீன் ஜீவராஜ் (36) என்பவா் வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், வீட்டில் பதுக்கிவைத்திருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.