முகப்பு
திருச்சி

பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்தியவா் கைது

திருச்சியில் பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 10:04 PM
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்திய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உறையூா் பாளையம் பஜாரை சோ்ந்தவா் பா. ஆறுமுகம் (55), பால் வியாபாரி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறாா். இவா், கடந்த சனிக்கிழமை தனது மகனுடன் காரில் சென்றுள்ளாா்.

உறையூா் பாளையம் பஜாா் அருகே சென்றபோது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த உறையூா் பங்காளி வீதியைச் சோ்ந்த பி. முகமது இப்ராஹிம் (55), காரில் மோதுவது போல இருசக்கர வாகனத்தை இயக்கியுள்ளாா்.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், முகமது இப்ராஹீம் ஆறுமுகத்தை தாக்கியதுடன் காரையும் சேதப்படுத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, முகமது இப்ராஹீமை திங்கள்கிழமை கைது செய்தனா்.