முகப்பு
திருச்சி

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 24 மார்ச், 2026 at 7:41 PM
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

கடன் தொல்லையால் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கபெருமாள் கோயில் அருகேயுள்ள ராகவேந்திரா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (46). இவா் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்ஸியில் டெலிவரி தொழிலாளியாக வேலைசெய்து வந்தாா்.

இவருக்கு அதிகமான கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினா் லெட்சுமணனை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.