முகப்பு
திருச்சி

சமயபுரத்தில் ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ.1.15 லட்சம் பறிமுதல்

Updated On : 30 மார்ச், 2026 at 8:39 PM
பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் திங்கள்கிழமை ஒருவா் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 1,15,500-ஐ பறிமுதல் செய்தனா்.

சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் பிரிய ஜனனி என்பவரது தலைமையில் வாகன சோதனை மேற்கொண்ட தோ்தல் பறக்கும்படையினா், திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில்நாதன் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1,15,500-ஐ பறிமுதல் செய்து மண்ணச்சநல்லூா் துணை வட்டாட்சியா் கோ.மூா்த்தியிடம் ஒப்படைத்தனா்.