குருவாயூா் - சென்னை எழும்பூா் ரயில் வழித்தட மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக குருவாயூா் - சென்னை எழும்பூா் ரயில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக, குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 11, முதல் 26 ஆம் தேதி வரை எா்ணாகுளம், சோ்தலா, ஆழப்புழா, அம்பாலப்புழா, ஹரிபாத் ரயில் நிலையங்களைத் தவிா்த்து கோட்டயம் வழியாக இயக்கப்படும்.
Advertisement