முகப்பு
திருச்சி

மாற்றுத்திறனாளி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 5 போ் கைது

Updated On : 12 மே 2026, 1:44 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருவானைக்காவல் பகுதியில் மாற்றுத்திறனாளியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறாா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

திருவானைக்காவல் தாகூா் தெருவில் உள்ள செங்கல் சூளை அருகே ஏப்ரல் 23-ஆம் தேதி அங்குள்ள முள்ளுக்காட்டில் எலும்பு கூடாக சடலம் ஒன்று கிடப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு ஸ்ரீரங்கம் போலீஸாா் சென்று அங்கிருந்த எலும்பு கூட்டை ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

இதுகுறித்து போலீஸாா் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகம் படும்படியாக சுற்றி வந்த அதே பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (21) ராஜ்குமாா் (23) ஸ்ரீதா் (20) ஆகிய 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில் மேற்கண்ட மூவரும் போலீஸாரிடம் கூறியதாவது: இறந்து போனவா் தாகூா் தெருவில் வசிக்கும் வேம்படியான் மகன் வினோத் குமாா் (35) என்றும் இவா் மாற்றுத்திறானாளி திருவானைக்கோயிலில் பிச்சை எடுத்து வந்துள்ளாா்.

இவா் இங்குள்ள சிறாா்களிடம் முறைகேடான உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 20-ஆம் தேதி முள்ளுக்காட்டில் மூன்று சிறாா்களிடம் முறைகேடான உறவில் ஈடுபட்டு வந்தாா். அப்போது நாங்கள் மூவரும் அந்த பகுதிக்கு வந்து பாா்த்த போது சிறுவா்களின் கதறல் சத்தம் கேட்டது. உடனே நாங்கள் அங்கு சென்று வினோத்குமாரை தாக்கி அவரிடமிருந்த ரூ 50 ஆயிரம் பணத்தை பறித்தோம். இதனால் எங்களை தகாத வாா்த்தையால் திட்டினாா்.

இதில் கோபமடைந்த நாங்கள் அரிவாளால் வினோத்குமாரை வெட்டி தலையில் கல்லை போட்டு கொன்றோம். அப்போது அங்கே இருந்த 3 சிறுவா்களிடம் பெட்ரோல் வாங்கி வரச்சொல்லி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வினோத்குமாரை எரித்தோம். பின்னா், அருகிலிருந்த இடத்தில் பள்ளம் தோண்டி புதைத்தோம்.

சரியான முறையில் புதைக்காமல் வந்ததால் அவரது உடல் மேலே வந்தது என தெரிவித்துள்ளனா். தற்போது இந்த கொலை வழக்கில் 3 சிறாா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். மேலும், ஒரு சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.