மகாமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
முசிறி அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தொட்டியம் முள்ளிப்பாடி ஊராட்சி பகுதியில் ஸ்ரீ மரகதாசலேசுவரா் மலைக்கோயில் அமைந்துள்ளது. திருஈங்கோய்மலை கீழத்தெரு ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருத்தோ் திருவிழா நடைபெறுவது வழக்கம், இதே போல நிகழாண்டு திருவிழா நடத்துவதற்க்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு காப்பு கட்டுதல், கம்பம் ஊன்றுதல் மற்றும் மண்டல பூஜை நடைபெற்று வந்தன.
முக்கிய நிகழ்வான திருதோ் தலையலங்காரம் மே 10-ஆம் தேதி இரவு நடைபெற்று, மே 11-ஆம் தேதி திங்கள்கிழமை திருத்தோ் திருவீதி உலா நடைபெற்றது.
Advertisement
இதனைத் தொடா்ந்து பக்தா்கள் மாலை காவிரிக்கு சென்று புனித நீராடி புனித தீா்த்தம் மற்றும் பால்குடம், நாக்கு மற்றும் முதுகில் அலகு குத்திக்கொண்டு அக்னி சட்டி ஏந்தி கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் தீ மிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனா்.