சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
திருச்சியில் சாலையோரத்தில் இருந்த இரும்பு கம்பம் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காா் மோதியதில் அதில் பயணித்த மூதாட்டி உயிரிழந்தாா்.
திருச்சியில் சாலையோரத்தில் இருந்த இரும்பு கம்பம் மீது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காா் மோதியதில் அதில் பயணித்த மூதாட்டி உயிரிழந்தாா்.
திருச்சி மேலகல்கண்டாா்கோட்டையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி மைதிலி (63), இவரது மகன் சரவணன் (44).
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, சரவணன், மைதிலி மற்றும் சரவணன் மகன் அருரா (5) ஆகிய மூவரும் காரில் சென்றுள்ளனா்.
Advertisement
பொன்மலை ரயில்வே பணிமனையின் மேற்கு நுழைவாயில் அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரத்தில் இருந்த இரும்பு கம்பம் மீது மோதியது.
இதில், மைதிலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல சரவணன் மற்றும் அவருடைய மகன் அருராவும் காயமடைந்தனா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே மைதிலி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். சரவணன், அருரா ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.