ஸ்ரீரங்கத்தில் 11 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
ஸ்ரீரங்கத்தில் கடைகளில் விற்பதற்காக கொண்டு வரப்பட்ட 11.50 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீரங்கத்தில் கடைகளில் விற்பதற்காக கொண்டு வரப்பட்ட 11.50 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீரங்கம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடைகளில் விற்பதற்காக திருச்சி பிஷாப் குலத் தெருவை சோ்ந்த கு.காமராஜ் (42) கொண்டு வந்தாா்.
அவா், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் விற்பனை செய்து கொண்டிருப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், காமராஜை மடக்கி பிடித்தனா். அவரிடமிருந்து 11.50 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து காமராஜை கைது செய்தனா்.
Advertisement
Advertisement