அரியலூர்

கபீர் புரஸ்கர் விருது: டிச.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

அரியலூர் மாவட்டத்தில் சமுதாய நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பணியாற்றியவர்கள் கபீர் புரஸ்கர் விருது பெற டிசம்பர் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ம.ராமசுப்ரமணியராஜா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  நாட்டிற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் பணியாற்றியவர்களுக்கு  இந்திய  அரசு  ஆண்டுதோறும் கபீர் புரஸ்கர் விருது வழங்கி வருகிறது.
அதன்படி 2018 ஆம் ஆண்டிற்கு கபீர் புரஸ்கர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான  w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n      மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  
பூர்த்தி செய்த  விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை பெற வேண்டியுள்ளதால்,மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செந்துறை சாலை, ராஜாஜி நகர், அரியலூர் என்ற முகவரிக்கு 10.12.2017 ஆம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்பிவைக்க வேண்டும்.   மேலும் விவரங்களுக்கு ஹாக்கி பயிற்றுநர் ந.லெனினை 9443561313 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT