அரியலூர் அருகே ஜாமீனில் வெளியே வந்த போலி மருத்துவர் மீண்டும் கைது
அரியலூர் அருகே ஜாமீனில் வெளியே வந்த போலி மருத்துவர் மீண்டும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அரியலூர் அருகே ஜாமீனில் வெளியே வந்த போலி மருத்துவர் மீண்டும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(52). பி.எஸ்.ஸி.,கம்பியூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், வேறு ஒருவரின் பெயரில் அப்பகுதியில் மருந்தகம் (மெடிக்கல்) நடத்தி வருகிறார். உடல்நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு அவ்வப்போது ஊசி போட்டும், மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்துள்ள இவரை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார், கடந்த 21 ஆம் தேதி அவிலா சரஷா என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளித்ததில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு, கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ராஜ்குமாரை வியாழக்கிழமை மீண்டும் கைது செய்தனர்.