அரியலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் விழிப்பணர்வு பேரணி

DIN

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார வளமையம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதன்கிழமை நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகள் தன்மையறியும் முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரணியை உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் நீலமேகம் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் தமிழ்முருகன் முன்னிலை வகித்தார்.
பேரணியானது ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்டு  முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது.
ஆசிரியர் பயிற்றுநர்கள் செந்தில், திருமுருகன், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஆசிரியர்கள் மணிவண்ணன், ஸ்ரீபிரியா, பேபி, டெல்பியானா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT