அரியலூர்

மருதையாற்று பாலத்தின்  இருபுறமும் உள்ள கருவை மரங்களை அகற்ற கோரிக்கை

DIN

அரியலூர் அருகே மருதையாற்று பாலத்தின் இருபுறமும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூரை அடுத்த வாரணவாசி அருகேயுள்ள மருதையாற்று பாலத்தையொட்டிய  இரு புறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் அடந்தியாக வளர்ந்துள்ளன.  வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக பாலத்தினை ஒட்டி செல்லும் போது, சீமைக்கருவேல மரங்கள் அவர்களை காயப்படுத்துகிறது.  முள் குத்திவிடுவதால் காயங்களுடன் செல்லும் நிலை உள்ளது.
இதனால் தினமும் பாலத்தில் செல்வோர் தங்கள் மீது மரம் உரசுவதை  தடுக்கும் விதமாக பாலத்தின் மையப்பகுதியில் தங்களது வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் வகையில் அமைகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மருதையாற்று பாலத்தின் இருபுறமும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT