அரியலூர்

வேகத்தடைகளை அகற்ற கோரிக்கை

DIN

அரியலூர் மாவட்டம் வங்காரம் காலனித்தெருவில் உள்ள வேகத்தடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் (பொ) எஸ். தனசேகரனிடம், சமூக ஆர்வலர் சோழன்குடி கணேசன் திங்கள்கிழமை மனு அளித்தார்.
அவர் அளித்த மனு:
அரியலூர் மாவட்டம் வங்காரம் காலனியிலிருந்து ஊர் தெரு வரை 10 மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பேருந்தில் பயணம் செய்வோரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே 2 வேகத்தடைகளை தவிர மற்ற அனைத்து வேகத்தடைகளையும் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்றொரு மனு: செந்துறையிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் அரியலூர் இருசு குட்டை வழியாக வந்தால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்ல மிகவும் வசதியாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT