அரியலூர்

தடையின்றி குடிநீர் வழங்க கோரிக்கை

DIN

அரியலூர் மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தா.பழூரில் அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் தெருமுனை கூட்டத்தில் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடையைச் சரி செய்ய வேண்டும். நியாய விலைக்கடைகளில் பொருள்களைத் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் ஒன்றியச் செயலர் தங்கராசு தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், பழனிவேல், தங்கையன், லட்சுமி, அழகேசன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT