முகப்பு
அரியலூர்

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும்

டெங்கு காய்ச்சல் தொடர்பாக தங்கள் பெற்றோருக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

டெங்கு காய்ச்சல் தொடர்பாக தங்கள் பெற்றோருக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு  அறிவுரை வழங்கினார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா.
அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஒன்றியத்துக்குள்பட்ட கோடங்குடி ஊராட்சியில் சுகாதாரம் மற்றும்  ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை வீடு, வீடாகச் சென்று  புதன்கிழமை நேரில்  ஆய்வு செய்தார் ஆட்சியர்.
ஆய்வின் போது, சுகாதாரமற்ற முறையில் குடிநீர் தேக்கத் தொட்டியை வைத்திருந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்ட ஆட்சியர், தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை  அப்புறப்படுத்தவும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
வீடுகளில் தண்ணீரை சுத்தமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டியவை, டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய ஆட்சியர், தொடர்ந்து தா. பழூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
 டெங்கு காய்ச்சல் தொடர்பாக தங்களுடைய பெற்றோருக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுரையும் வழங்கினார்.  தா.பழூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் செந்தில்,  மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →