அரியலூர்

பள்ளி சமையலறையை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய வடக்கு பள்ளி சமையலறை புகைபோக்கி துவாரம்  அடைக்கப்படாததால் மழைநீர் சமையலறைக்குள் புகுவதால் சமையலறை வராண்டாவில் சமைக்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கும், ஜயங்கொண்டம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பயிலும் 11 மாணவர்களுக்கும் சமையல் செய்து வழங்கப்படுகிறது. இந்த பள்ளி சமையலறையின் மேற்கூரை துவாரத்தின் மேல்பகுதி மூடப்படவில்லை. இதனால் மழைபெய்யும்போது, அந்த துவாரத்தின் வழியாக மழைநீர் உள்ளே புகுந்து சமைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சமையலறை கட்டத்தின் முன்புறம் உள்ள வராண்டாவில் சமையல் செய்யப்படுகிறது. மேலும் இப்பள்ளிக்கு எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால்  எரிவாயு வழங்கப்படவில்லை. இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் சமையலறைக்கு வெளியே கற்களை வைத்து சமையல் செய்யப்படுகிறது.  இதுகுறித்து சம்பந்தபட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT